• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டுபெத்த, கைத்தொழில் பொறியியலாளர் பயிற்சி நிறுவனத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டம்
- கட்டுபெத்த, கைத்தொழில் பொறியியலாளர் பயிற்சி நிறுவனத்தினால் இயந்திர, நிருமாணிப்பு, மர வேலை ஆகிய துறைகளின் கீழ் தேசிய தொழில்சார் தகைமைகள் (NVQ) 4 ஆம் மட்ட மூன்றுவருட கால முழுநேர பாடநெறிகளும் ஒருவருட கால கணனி பாடநெறிகளும் நடாத்தப்படுகின்றன. தொழில் சந்தைக்கு ஏற்ற பாடநெறிகளைக் கொண்ட இந்த நிறுவனத்திற்குத் தேவையான வசதிகளை விருத்தி செய்வதன் மூலம் வருடாந்தம் ஆட்சேர்ப்புச் செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க ஒஸ்ரியாவின் சலுகை கடன் திட்டத்திலிருந்து நிதி வசதிகளை பெற்றுக் கொண்டு இந்த நிறுவனத்தை 2,400 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டில் விருத்தி செய்வதற்கு விரிவான கருத்திட்ட பிரேரிப்பொன்றை கோருவதற்கும் இதற்குத் தேவையான வௌிநாட்டு நிதி உதவியினை பெற்றுக் கொள்வதற்குமாக விஞ்ஞான, தொழினுட்ப, ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சர் (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.