• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1982 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவன சட்டத்தை திருத்துதல்
- இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்தின் தொழிற்பாடுகளினதும் நிருவாக கட்டமைப்பினதும் தற்காலத் தேவைகளுடன் பொருந்தச் செய்வதற்கு அவசியமான திருத்தங்களை உள்ளடக்கி, 1982 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவன சட்டத்தில் திருத்தங்களைச் செய்யும் பொருட்டு பொது நிருவாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.