• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2021 ஆம் ஆண்டில் இலங்கையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டினை நடாத்துவதற்கு அனுசரணை வழங்குதல்
- 2021 ஆம் ஆண்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு அனுசரணை வழங்குவதற்கான உத்தேசம் பற்றி இலங்கையின் நீண்டகால அபிவிருத்தி பங்காளரான ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் தொடர்பு கொள்ளும் பொருட்டும் இந்நோக்கம் கருதி தேசிய கண்காணிப்பு குழுவொன்றையும் உப குழுக்களையும் நியமிக்கும் பொருட்டும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.