• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உயிரியல் தொழினுட்ப ஆய்வுகூடமொன்றைத் தாபித்தல் தொடர்பில் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
- இலங்கையில் கூட்டு உயிரியல் தொழினுட்ப ஆய்வுகூடமொன்றை தாபிப்பதற்காக இலங்கைக்கும் சீன அரசாங்கத்தின் விஞ்ஞான மற்றும் தொழினுட்ப அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று இதற்கு முன்னர் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு இரு தரப்புக்கும் இடையில் தொழினுட்ப ஒத்துழைப்பினை பலப்படுத்துவதற்காக உடன்பட்டுள்ள தர மற்றும் நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்ட இரண்டாவது உடன்படிக்கையினை கைச்சாத்திடும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப, ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சர் (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.