• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பசளை கொள்வனவு
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, செப்ரெம்பர் மாதத்திற்கான இரசாயன பசளை கொள்வனவு கருதி Ceylon Fertilizer Company Limited நிறுவனத்தினாலும் Colombo Commercial Fertilizer Company Limited நிறுவனத்தினாலும் தேவைப்படுத்தப்படும், 54,000 மெற்றிக் தொன் யூரியாவை (சிறுமணிகள்) மெற்றிக் தொன் ஒன்றுக்கு 305 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்திலும் 6,500 மெற்றிக் தொன் யூரியாவை (குருணிகள்) மெற்றிக் தொன் ஒன்றுக்கு 325 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்திலும் Agri Commodities and Finance நிறுவனத்திடமிருந்தும் 15,000 மெற்றிக் தொன் ரிபிள் சுப்பர் பொஸ்பேட்டை மெற்றிக் தொன் ஒன்றுக்கு 334.1 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்தில் Swiss Singapore Overseas Enterprises நிறவனத்திடமிருந்தும் கொள்வனவு செய்வதற்கான அங்கீகாரம் கருதி கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.