• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பதுளை மாகாண பொது வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சை பிரிவை நிருமாணிப்பதற்கான பெறுகை
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, அறியப்படாத நோய்க் காரணியைக் கொண்டுள்ள நாட்பட்ட சிறுநீரக நோய்களினால் இன்னலுறும் நோயாளர்களுக்காக நிபுணத்துவ சிகிச்சை வழங்கும் பொருட்டு பதுளை பொது வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சை பிரிவை நிருமாணிப்பதற்கான பெறுகையினை 668.2 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s.Orient Construction (Pvt) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.