• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
5,000 ஏற்றுமதி உற்பத்தி கிராமங்களைத் தாபித்தல்
- ஏற்றுமதி சந்தைக்குப் பொருந்தக்கூடியதாக ஆரம்ப உற்பத்திப் பொருட்களின் பெறுமதிசேர்க்கப்பட்ட உற்பத்தி பொருட்களை அதிகரிக்கும் பொருட்டு ஒன்றிணைந்த செய்முறைக்குள் விவசாயிகளின் ஆரம்ப உற்பத்தி பொருட்களை மேம்படுத்தும் குறிக்கோளுடன், 02 கட்டங்களின் கீழ் நாட்டில் 5,000 ஏற்றுமதி உற்பத்தி கிராமங்களைத் தாபிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திற்கும் பொருந்தும் உற்பத்தி பொருட்களானவை அவற்றிலுள்ள வளச் செழிப்பின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுமென்பதுடன், விவசாயிகளுக்குத் தேவைப்படும் நிதி வசதிகள், தொழினுட்பம், வினைத்திறனான வளப் பயன்பாடு, பண்ணை முகாமைத்துவம், அறுவடை பொதியிடல் மற்றும் போக்குவரத்து போன்ற செயற்பாடுகளில் பயிற்சியினை வழங்குவதற்கும் உள்நாட்டு மற்றும் சருவதேச சந்தைகளுக்கான அணுகுவழியினைப் பெற்றுக் கொள்வதற்கென வாய்ப்பும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ஏற்றுமதி அபிவிருத்திக்கான ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்திற்கான கருத்திட்டத்தின் கீழ் இந்த நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கும் இதன் முதலாவது கட்டத்தின் கீழ் 300 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குள் 1,000 ஏற்றுமதி உற்பத்திக் கிராமங்களை தாபிப்பதற்கும் 2018 தொடக்கம் 2020 வரையான காலப்பகுதிக்குள் இந்தக் கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கும் மொத்த கிராம எண்ணிக்கையினை கட்டம் கட்டமாக 5,000 வரையில் முன்னேற்றுவதற்கும் சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.