• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நுவரெலியா நானுஓயா பிரதேசத்தில் மும்மொழி கலவன் தேசிய பாடசாலையொன்றை புதிதாக ஆரம்பித்தல்
- நுவரெலியா மாவட்டத்திலுள்ள கல்வி வசதிகளை மேலும் அபிவிருத்தி செய்யும் பொருட்டு சகல வசதிகளுடனும் கூடிய மும்மொழி கலவன் தேசிய பாடசாலையொன்றை 800 மில்லியன் ரூபா முதலீட்டில் நானுஓயா பிரதேசத்தில் தாபிப்பதற்கும் அதனை தரம் 6 இலிருந்து தரம் 13 வரை மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் பாடசாலையொன்றாக நடாத்திச் செல்வதற்கும் அதற்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்வதற்குமாக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.