• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெங்கு துறையின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல்
- நாட்டிலுள்ள தென்னங் காணிகளின் சுமார் 84 சதவீதம் 20 ஏக்கரைவிட சிறிய தென்னந்தோட்டங்களாக இனங்காணப்பட்டுள்ளது. ஆதலால் சிறிய தென்னந்தோட்டங்களின் விளைவு பெருக்கத்தை அதிகரிப்பதன் மூலம் உற்பத்தி செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் இலாபகரமான நிலைபேறுடைய கைத்தொழில் ஒன்றாக மாற்றும் நோக்கில் தென்னங் காணி உரிமையாளர்களுக்கும் 'கப்ருக்க' நிதிய சங்க உறுப்பினர்களுக்கும் தென்னை மரங்களில் ஏறும் இயந்திரங்கள், பசளை இடுவதற்காக பயன்படுத்தப்படும் சிறிய ரில்லர் இயந்திரம், சிவப்பு தென்னம் வண்டு பொறி, புல்லு வெட்டும் இயந்திரம், தௌிகருவிகள் மற்றும் தென்னை மரங்களை துண்டாடும் இயந்திரம் போன்றவற்றை வழங்குவதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.