• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பின் அறுவடை பற்றிய தொழினுட்ப நிறுவனத்தின் பெயரை 'தேசிய பின் அறுவடை முகாமைத்துவ நிறுவனம்' என திருத்துதல்
- 2000 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டுள்ள பின் அறுவடை பற்றிய தொழினுட்ப நிறுவனம் பயிர்களின் அறுவடை நிலையிலிருந்து அவற்றின் பெறுமதி சேர்த்தல் ஊடாக நுகர்வு வரை பின் அறுவடை தொழினுட்ப ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் நிறுவனமொன்றாகும். இலங்கையில் பின் அறுவடை பற்றிய தொழினுட்ப, ஆராய்ச்சி அபிவிருத்தி மற்றும் ஒழுங்குறுத்துகை செயற்பாடுகளை வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் செயற்படுத்துவதற்காக இந்த நிறுவனத்தின் பெயரை 'தேசிய பின் அறுவடை முகாமைத்துவ நிறுவனம்' என திருத்தும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.