• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்ளக நீர் வழிகள் சார்ந்த பயணிகள் போக்குவரத்து கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- பத்தரமுல்லையிலிருந்து வௌ்ளவத்தை வரையிலுள்ள கால்வாய் ஊடாகவும் பேரே ஏரி ஊடாக கொழும்பு கோட்டையிலிருந்து யூனியன் பிளேஸ் வரையும் களனி கங்கையின் ஊடாகவும் ஏனைய நீர் வழிகள் ஊடாகவும் மட்டக்குளியவிலிருந்து ஹங்வெல்ல வரையும் அரசாங்க - தனியார் பங்களிப்பு கருத்திட்டமொன்றாக நீர் வழிகள் ஊடாக பயணிகள் போக்குவரத்து சேவையொன்றை நடாத்திச் செல்வதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க - தனியார் பங்களிப்பு என்னும் வடிவில் இந்த கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், முதலில் இலங்கை கடற்படையின் உதவியுடன் பேரே ஏரி ஊடாக கொழும்பு கோட்டையிலிருந்து யூனியன் பிளேஸ் வரை இரண்டு வருட காலத்திற்கு முன்னோடி கருத்திட்டமொன்றாக நடைமுறைப்படுத்து வதற்கும் இதற்குத் தேவையான படகுகளை கொள்வனவு செய்வதற்கும் இறங்குத்துறைகளை நிருமாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளமை பற்றி மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் அமைச்சரவை அறிந்து கொள்ளும் பொருட்டு சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களின்பால் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டது.