• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலநிலை மாற்றங்களை குறைப்பதற்கான பங்களிப்புக் கருத்திட்டம்
- இலங்கை 2016 ஆம் ஆண்டில் பசுமை வீட்டு வாயுக்கள் வௌியேற்றத்தை குறைப்பதற்கான ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றங்கள் பற்றிய சமவாயத்தின் கீழ் பாரிஸ் உடன்படிக்கைக்கு செயல்வலுவாக்கம் அளித்ததன் மேல் காலநிலை மாற்றங்களுக்கு காரணமாய் அமையும் பசுமை வீட்டு வாயுக்கள் வௌியேற்றத்தை குறைக்கும் உலகளாவிய முயற்சிக்கு பங்களிப்பு நல்குவதற்கு இலங்கை கட்டுப்பட்டுள்ளது. இதன் பொருட்டு உள்நாட்டில் வழங்கப்படவேண்டிய பங்களிப்பின் கீழ் வலு சக்தி, போக்குவரத்து, கைத்தொழில், கழிவுப் பொருட்கள் மற்றும் வனங்கள் ஆகிய ஐந்து (05) முக்கிய துறைகள் சார்பில் பசுமை வீட்டு வாயுக்கள் வௌியேற்றத்தை குறைக்கக்கூடிய விரிவான செயற்பாட்டு தொடரொன்றை முன்வைப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு உள்ளூரில் நிர்ணயிக்கப்பட்ட குறியிலக்கினை அடையும் பொருட்டு மேல் ஒவ்வொரு துறைகளிலிருந்தும் வௌியேற்றப்படும் பசுமை வீட்டு வாயுக்களின் அளவு கண்டறியப்பட வேண்டியுள்ளது. இதன் சார்பில் நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள கருத்திட்டத்திற்காக இலங்கைக்கு கிடைக்கவுள்ள கொடைகளை பெற்றுக் கொண்டு உரிய கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.