• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க துறைக்கான சம்பள மீளமைப்பு தொடர்பில் விசேட ஆணைக் குழுவொன்றை நியமித்தல்
- அண்மைக்காலமாக அரசாங்க துறையிலுள்ள பல்வேறு சேவை வகுதிகள் அதன் சம்பளம் மற்றும் படிகளை அதிகரித்துக் கொள்வதற்கு தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றதன் காரணமாக பொது மக்கள் முகங்கொடுக்க வேண்டி நேர்ந்துள்ள கடும் இன்னல்களையும் அதேபோன்று பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதகமான தாக்கங்களையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு அரசாங்க துறையில் தற்போது நடைமுறையிலுள்ள சம்பள கட்டமைப்புகள் தொடர்பில் ஆராய்ந்து, முழு அரசாங்க சேவையினதும் சம்பளம் தொடர்புபட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பது நடைமுறைத் தேவையென இனங்காணப்பட்டுள்ளது. இந்த நிலைமைக்கு துரிதமாக தீர்வினைக் காண்பதற்காக ஒவ்வொரு துறையிலும் அறிவும் அனுபவமும் உள்ள நிபுணர்களை உள்ளடக்கிய விசேட ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் போது புகையிரத சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை சீர்செய்வது இந்த ஆணைக்குழுவின் விடயநோக்கெல்லையொன்றென குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் தேசிய சம்பளங்கள், பதவியணிகள் ஆணைக்குழுவின் பணிகளுக்கு மேலதிகமாக சம்பளங்களை மீளாய்வு செய்வதற்கான விசேட ஆணைக்குழுவொன்றைத் தாபிப்பதற்காக அதிமேதகைய சனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பு அமைச்சரவையின் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.