• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றுலா பிரயாணிகளுக்கிடையில் கவர்ச்சிகரமான இடமொன்றாக இலங்கையை மேம்படுத்தல்
- ஐக்கிய இராச்சியம், ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் சுற்றுலா பிரயாணிகளுக்கிடையில் கவர்ச்சிகரமான இடமொன்றாக இலங்கையை மேம்படுத்தும் பொருட்டு டிஜிட்டல் பிரசார திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அரசாங்க பெறுகை நடைமுறையின் கீழ் ஒவ்வொரு நாட்டிற்கும் திட்டவட்டமான டிஜிட்டல் பிரசார திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்குடன், இப் பெறுகையினை 703,480 ஐக்கிய அமெரிக்க டொலர் கொண்ட தொகையொன்று சார்பில் ஐக்கிய இராச்சியத்தின் Digital Spring Limited நிறுவனத்துக்கும், 697,770.92 ஐக்கிய அமெரிக்க டொலர் கொண்ட தொகையொன்று சார்பில் ஜேர்மனியின் Media Consulta International Holdings AG நிறுவனத்துக்கும் அத்துடன் 706,460 ஐக்கிய அமெரிக்க டொலர் கொண்ட தொகையொன்று சார்பில் பிரான்சின் Interface Tourism நிறுவனத்துக்கும் கையளிக்கும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.