• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"மெஹெவர பியச" செயலகக் கட்டடத்தின் பராமரிப்பு மற்றும் செயற்பாட்டு பணிகள் கருதி பொருத்தமான கம்பனி ஒன்றின் சேவைகளை பெற்றுக் கொள்ளல்
- சேவை பெறுநர்களுக்கு கூடுதல் பயனுறுதிவாய்ந்த தரமான சேவையினை வழங்கும் நோக்குடன் ஒரே கூரையின் கீழ், தொழில் அமைச்சையும் அதன் விடயநோக்கெல்லையின் கீழ் தொழிற்படும் ஏனைய சகல நிறுவனங்களையும் நடாத்திச் செல்வதற்கான "மெஹெவர பியச" என பெயரிடப்பட்ட 32 மாடிக் கட்டடமொன்றின் நிருமாண செயல்முறையானது தற்போது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதற்கிணங்க, இதே வகையான கட்டடமொன்றின் முறையான பராமரிப்புக்கான பயிற்றப்பட்ட பணியாட்டொகுதியினரின் அருமைத்தன்மைக் காரணமாக இக்கட்டடத்தின் பராமரிப்பு செயற்பாடுகள் கருதி ஆற்றல்மிக்க வௌியக நிறுவனமொன்றின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு தொழில் மற்றும் தொழில்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.