• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தங்களை செய்து கொள்ளல்
- உத்தமமான மட்டத்தில் பெற்றோலிய இருப்புகளை பேணும் நோக்குடன், 2018 செப்ரெம்பர் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 2019 யூன் மாதம் 30 ஆம் திகதி வரையிலான பத்து (10) மாத காலப் பகுதிக்குள் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தங்கள் இரண்டினை (02) கைசாத்திடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, பெற்றோலிய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கான பெறுகை ஒப்பந்தங்களை ஐக்கிய அரபுகள் இராச்சியத்தின் M/s Gulf Petrochem FZC நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.