• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பதலே நீர்வழங்கல் திட்டத்தை மேம்படுத்துதல், வலுசக்தி சேமிப்பு கருத்திட்டம்
- ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அம்பதலே நீர்வழங்கல் திட்டத்தை மேம்படுத்துதல், வலுசக்தி சேமிப்பு கருத்திட்டமானது நடைமுறைப்படுத்தப்படுவதற்கு இனங்காணப்பட்டுள்ளது. இக்கருத்திட்டத்தின் ஊடாக, அம்பதலே நீர் சுத்திகரிப்பு பொறித்தொகுதியின் நீர் குழாய் இணைப்புகளின் புனரமைப்பையும் மீள்நிறுவலையும் மேற்கொள்வதற்கும் இயந்திர சாதனங்களை நிறுவுவதற்கும் மற்றும் நீரிறைப்பு செய்முறைக்கான தன்னியக்க முறைமையொன்றையும் அறிமுகப்படுத்துவதற்கும் அத்துடன், 8,000 கன மீற்றர் கொள்ளளவு உடைய தாங்கியொன்றினை நிருமாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆதலால், அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, இக்கருத்திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுதலுக்கான ஒப்பந்தத்தை M/s Zongnan - SZSG JH JV நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.