• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சாலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுத களஞ்சியசாலை வெடித்ததன் காரணமாக சேதமடைந்த வாகனங்களுக்கு நட்டஈடு வழங்குதல்
- கொஸ்கம சாலவ இராணுவ முகாமிலுள்ள ஆயுத களஞ்சியசாலை வெடித்ததன் காரணமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பல சேதமடைந்ததோடு, இவ்வாறு சேதமடைந்த வீடுகள் வர்த்தக நிலையங்கள் உட்பட ஏனைய பல்வேறுபட்ட சொத்துக்கள் சார்பில் செலுத்தப்பட வேண்டிய நட்டஈட்டினை செலுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆயினும், சேதமடைந்த இருந்தபோதிலும் உரிய நட்டஈடு கிடைக்கப் பெறாத வாகனங்களுக்கு நட்டஈடு செலுத்தும் பொருட்டு நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.