• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1901 ஆம் ஆண்டின் தொழுநோயாளர் கட்டளைச் சட்டத்தை திருத்துத
- தொழுநோய் ஒல்லாந்தர் காலத்தில் தொற்றுநோயொன்றாக குறிப்பிடப்பட்டதோடு, இந்த நோய்க்கு சிகிச்சை இல்லாததன் காரணமாக அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தொழுநோயாளர்கள் மற்றையவர்களிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். 1901 ஆம் ஆண்டின் தொழுநோயாளர் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொழுநோயாளர்களை மற்றையவர்களிலிருந்து ஒதுக்கி வைப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது நவீன சிகிச்சைகள் காரணமாக தொழுநோயை முழுமையாக மாற்றக்கூடிய ஒன்றென இனங்காணப்பட்டதோடு, 1983 ஆம் ஆண்டிலிருந்து இந்த நோயாளிகளை மற்றையவர்களிடமிருந்து ஒதுக்கி வைப்பது இடைநிறுத்தப்பட்டது.
தொழுநோயிலிருந்து சுகமடைந்தாலும் மேற்போந்த கட்டளைச்சட்டத்தின் ஊடாக மற்றையவர்களிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட 31 தொழுநோயாளர்கள் ஹெந்தலை மற்றும் மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலைகளில் இதுவரை இருக்கின்றனர். இந்த நோயாளிகளுக்கு அவர்களுடைய சமூக தொடர்புகளை பேணுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்வதற்கு இயலுமாகும் வகையில் 1901 ஆம் ஆண்டின் தொழுநோயாளர் கட்டளைச் சட்டத்தை திருத்தும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.