• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விகாரைகளையும் அறநெறி பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்த
- நாடு முழுவதிலும் உள்ள விகாரைகளிலும் அறநெறி பாடசாலைகளிலும் வசதிகளை அபிவிருத்தி செய்யும் போது முறையாகவும் ஒத்த தன்மையிலும் அவற்றின் வசதிகளை ஏற்பாடு செய்யும் பொருட்டு பின்பற்றப்பட வேண்டிய பொருத்தமான வழிமுறையொன்றை சிபாரிசு செய்வதற்காக உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, விகாரைகளையும் அறநெறி பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்தினால் வசதிகளை ஏற்பாடு செய்யும் போது இரட்டிப்பாகமல் மிக முறையாக செயலாற்றுவதற்கு இயலுமாகும் வகையில் இந்ந குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள சிபாரிசுகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுப்பதற்கும் அரசாங்கத்தினால் எதிர்காலத்தில் ஏனைய மதவழிபாட்டு தலங்களின் அபிவிருத்தியின் பொருட்டு வசதிகளை ஏற்பாடு செய்யும் போது இந்த சிபாரிசுகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டும் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.