• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட துணை சிகிச்சை கட்டடத்தை நிருமாணித்தல்
- 1962 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் தற்போது 255 மாணவர்கள் வருடாந்தம் உள்வாங்கப்படுகின்றனர். மருத்துவ பீட மாணவர்களின் கல்வி தேவைகளுக்காக 280 மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் துணை சிகிச்சைக் கட்டடமொன்றை நிருமாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, அதன் கீழ் தளத்தினதும் முதல் மாடியினதும் நிருமாணிப்பு பணிகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த கட்டடத்துக்கு மேலும் 7,200 சதுர மீற்றர்களை சேர்த்து அபிவிருத்தி செய்யும் பொருட்டு உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.