• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பயணிகள் போக்குவரத்துக்காக சுற்றாடல் நட்புறவுமிக்க 1,000 பேரூந்துகளை ஈடுபடுத்துதல்
- நாளாந்தம் பயணிகளுக்கு போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு சுமார் 7,257 பேரூந்துகள் இலங்கை போக்குவரத்து சபையினால் ஈடுபடுத்த வேண்டியிருந்தாலும் தற்போது இந்த சபைக்குச் சொந்தமாக 6,540 பேரூந்துகள் மாத்திரமே உள்ளன. அதேபோன்று உரிய காலம் முடிவடைந்துள்ளமை மற்றும் கடும் விபத்துக்களுக்கு உட்பட்டுள்ளமை என்பன காரணமாக சேர்மத்திலிருந்து அப்புறப்படுத்தப்படும் பேரூந்துகளுக்காக சுமார் 500 புதிய பேரூந்துகள் வருடாந்தம் சேர்மத்தில் சேர்க்கப்பட வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 892 புதிய பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு ஏற்கனவே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதோடு, பயணிகள் போக்குவரத்து சேவையை தொடர்ச்சியாக நடாத்திச் செல்வதற்கு மேலும் 1,000 பேரூந்துகள் துரிதமாக கொள்வனவு செய்ய வேண்டுமென கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தேவைகளை நிறைவு செய்வதற்கு ஹங்கேரிய அரசாங்கத்தினதும் அங்குள்ள ஏற்றுமதி இறக்குமதி வங்கியினதும் உதவியுடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு மின்சார சக்தியினாலும் கலப்பு வலுசக்தியினாலும் இயங்கும் 1,000 பேரூந்துகளை அதன் சேர்மத்தில் சேர்ப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரிப்பினை பரிசீலனை செய்து சுற்றாடல் நட்புறவுமிக்க தொழினுட்பத்துடன் கூடிய மின்சாரத்தில் செயற்படும் 250 பேரூந்துகளையும் 750 கலப்பு பேரூந்துகளையும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு ஹங்கேரி Csepel Holdings Ltd., கம்பனியுடன் உடன்பாடொன்றுக்கு வரும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.