• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யானை மனித மோதலை தீர்ப்பதற்கான உத்தேச புதிய வேலைத்திட்டம்
- கடந்த 05 வருட காலப்பகுதிக்குள் யானை - மனித மோதல் காரணமாக 375 மனித உயிர்களும் 1,177 யானைகளும் சுமார் 5,800 சொத்து சேத சம்பவங்களும் அறிக்கையிடப்பட்டுள்ளன. தற்போது கடும் பிரச்சினையாக நிலவும் யானை - மனித மோதல்களை தீர்ப்பதற்கு துரித நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக, காட்டு யானைகளின் அச்சுறுத்தல் உள்ளதென புதிதாக இனங்காணப்பட்டுள்ள பிரதேசங்களில் 2,651 கிலோமீற்றர் நீளம் கொண்ட மின்சார வேலியொன்றை நிருமாணிப்பதற்கும் ஏற்கனவே தாபிக்கப்பட்டுள்ள 4,349 கிலோமீற்றர் நீளம் கொண்ட மின்சார வேலியின் செயலற்று இருக்கும் இடங்களை இணைப்பதற்கும், யானைக்கான வேலிகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக விசேட லேவைத்திட்டமொன்றுக்குத் தேவையான மனித வளங்கள் உட்பட வசதிகளை அதிகரிப்பதற்கும், புதிதாக தாபிக்கப்படும் மின்சார வேலியை உரிய முறையில் பராமரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த நிகழ்ச்சித்திட்டத்தை 2018 ஆம் ஆண்டில் ஆரம்பித்து துரிதமாக நடைமுறைப் படுத்துவதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளைப் பெற்றும் கொள்ளும் பொருட்டு வலுவாதார அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.