• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய கல்வி நிறுவனம் அமைந்துள்ள காணி மற்றும் அதற்குரிய அழகியற் கல்வி நிறுவனம் அமைந்துள்ள பாதுக்கை மீபேயிலுள்ள காணியை தேசிய கல்வி நிறுவனத்துக்கு உடைமையாக்கிக் கொள்ளல்
- மஹரகம தேசிய கல்வி நிறுவனம் அமைந்துள்ள 17.53 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணியையும் இந்த நிறுவனத்தின் நிருவாகத்தின் கீழ் உள்ள பாதுக்கை மீபேயிலுள்ள அழகியற் கல்வி நிறுவனம் அமைந்துள்ள ஏக்கர் 16, பேர்ச்சர்ஸ் 26 விஸ்தீரணம் கொண்ட காணியையும் முறையாக தேசிய கல்வி நிறுவனத்துக்கு உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.