• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாத்தறை சிறைச்சாலையை கொட்டவிலவத்த பிரதேசத்துக்கு இடம் நகர்த்துதல்
- மாத்தறை சிறைச்சாலையில் தற்போது நிலவும் இடவசதிகள் போதுமானதாக இல்லாததன் காரணத்தினால் இந்த சிறைச் சாலையை கொட்டவிலவத்த பிரதேசத்துக்கு இடம் நகர்த்துவதற்குத் திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கமைவாக 700 கைதிகளுக்கு அடிப்படை வசதிகளுடன் உத்தியோகபூர்வ வீடுகள், படைவீரர் குடியிருப்புகள், நீர், மின்சாரம், கண்காணிப்பு கமராக்கள், பயன்பாடு மற்றும் துப்பரவேற்பாட்டு முறைமைகள் உட்பட ஏனைய வசதிகளுடன் நிருமாணிப்பதற்குத் தேவையான 2,950 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகையினை நடுத்தவணைக்கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பின் ஊடாக பெற்றுக் கொள்ளும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக் கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.