• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆறு (06) பால் பதனிடல் நிலையங்களை அபிவிருத்தி செய்தல்
- தேசிய பால் தொழிலை மேம்படுத்தும் நோக்கில் சிறிய அளவிலான 06 பால் பதனிடல் நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் பொருட்டு பிரான்ஸ் Netixis முதலீட்டு வங்கியின் நிதி உதவியின் கீழ் ஆறு (06) பால் பதனிடல் நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு பிரான்ஸ் பொகார்ட் நிறுவனத்துடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு கடற்றொழில், நீரகவளமூல அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.