• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை அபிவிருத்தி செய்தல்
- இலங்கை மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஒழுங்குறுத்தப்படும் 15 பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக, பாராளுமன்ற சட்டங்களின் மூலம் பல்வேறுபட்ட அமைச்சுக்களின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள ஐந்து (05) பல்கலைக்கழகங்கள் செயற்படுகின்றன. அரசாங்கத்தின் உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் இடவசதிகளின் வரையறை காரணமாக வௌிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து குறித்த இந்த பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு நிறுவனங்களாகவும் தமது நிறுவனத்தினாலேயே பட்டங்களை வழங்குவதற்கு அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ள மேலும் 16 உயர்கல்வி நிறுவனங்கள் நாட்டில் இயங்குகின்றன. இந்த உயர்கல்வி நிறுவனங்கள் சகலவற்றினதும் அங்கீகார மற்றும் தர உத்தரவாதத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் உயர் கல்வி துறையில் தரத்தையும் ஒத்தியலும் தன்மையையும் உறுதிப்படுத்துவதற்கு தர உத்தரவாத மற்றும் அங்கீகார ஆணைக்குழுவைத் தாபிப்பதற்குத் தேவையான சட்டங்களை வரையும் பொருட்டு உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.