• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மூத்த கலைஞர்களுக்கு வீட்டு வசதிகளை வழங்குதலும் சீன - இலங்கை அரும்பொருட் காட்சியகம் ஒன்றைத் தாபித்தலும்
- இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் மாண்புமிகு கரு ஜயசூரிய அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக மூத்த கலைஞர்களுக்கு வீட்டு வசதிகளை வழங்குவதற்கு 108 வீடுகளை நிருமாணிப்பதற்கும் சீன - இலங்கை வரலாற்று ரீதியிலான உறவினை அடையாளப்படுத்தும் பொருட்டு அரும்பொருட் காட்சியகம் ஒன்றை தாபிப்பதற்குமாக தேவைப்படும் நிதியினை வழங்குவதற்கு சீன அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி உதவியின் கீழ் இந்த கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.