• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
எம்பிலிபிட்டிய நகர அபிவிருத்தி கருத்திட்டத்திற்கும் நகர பூங்கா அபிவிருத்திற்கும் தேவையான காணிகளை குறித்தொதுக்கிக் கொள்ளல்
- அம்பாந்தோட்டை நகரத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் துரித அபிவிருத்தி கருத்திட்டங்கள் காரணமாக அதற்கு அண்மையில் அமைந்துள்ள எம்பிலிபிட்டிய நகரம் துரித அபிவிருத்திக்கு உட்பட்டு வருகின்றது. இதற்கமைவாக, எம்பிலிபிட்டிய நகரத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்யும் பொருட்டு தேவையான கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எம்பிலிபிட்டிய நகர மத்திய அபிவிருத்தி கருத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் கீழ் காவன்திஸ்ஸ குளம் மற்றும் சுற்று பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கும் நகர மத்திய அபிவிருத்தி கருத்திட்டத்தின் மூலம் சிறுவர் பூங்கா, வீதி அபிவிருத்தி உட்பட ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக, இந்த இரு கருத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான காணியினை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.