• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு ஏற்கக்கூடிய விலையில் வீடுகளை வழங்கும் வேலைத்திட்டம்
- நடுத்தர வருமானம் பெறும் சமூகத்தினரின் அதிகரித்து வரும் வீட்டுத் தேவைக்கு ஏற்றவிதத்தில் வீடுகளை வழங்குவதற்கு அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக, தொழில்சார்பாளர்கள் மற்றும் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்களுக்கான வீட்டு தேவைகள் சார்பில் கொட்டாவ, ஒருகொடவத்தை, அநுராதபுரம், நுவரெலியா, அவிசாவெல்ல மற்றும் ஹொரண ஆகிய பிரதேசங்களில் 1,900 வீடுகள் கொண்ட கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.