• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்துதல்
- 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக வயம்ப பல்கலைக்கழக்துக்கு புதிய மருத்துவ பீடமொன்றை வழங்கும் பிரேரிப்புக்கு ஒருங்கிணைவாக இந்த பீடத்திற்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் சிகிச்சை பயிற்சி நோக்கங்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்யும் பொருட்டு குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உயர் தரம் மிக்க சிகிச்சை பயிற்சியினை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையை சகல வசதிகளுடனும் கூடிய முழுமையான போதனா வைத்தியசாலையொன்றாக தரமுயர்த்தும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.