• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2018 நிதியாண்டின் முதலாம் காலாண்டில் அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவு தொடர்பிலான அறிக்கை
- 2017 ஆம் ஆண்டிலிருந்து அரசாங்கத்தின் உண்மையான செலவு மற்றும் உண்மையான வருமானம் பற்றிய மூன்று மாத காலத்திற்கான அறிக்கையானது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றது. இதற்கிணங்க, 2018 நிதியாண்டின் முதலாம் காலாண்டினுள் 403 பில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதோடு, (அரசாங்கத்தின் கடன் சேவைகள் தவிர) அது இந்த காலாண்டின் குறியிலக்காகக் கொள்ளப்பட்ட செலவின் 91 சதவீதமாகும். அரசாங்கத்தினால் இந்த காலாண்டினுள் திரட்டிய வருமானம் 469 பில்லியன் ரூபாவாவதோடு, இதில் 425 பில்லியன் வரிமூலமும் 44 பில்லியன் ரூபா வரி அற்ற மூல வளங்களின் மூலமும் கிடைக்கப் பெற்றுள்ளது. இது காலாண்டினுள் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தின் 90.2 சதவீதமாகும். அதேபோன்று 2018 ஆம் ஆண்டுக்கான முதலாம் காலாண்டினுள் செயற்படுத்தப்பட்ட 1,354 கருத்திட்டங்களில் இருந்து 561 கருத்திட்டங்கள் காலாண்டுக்கான குறியிலக்கின் 75 சதவீதத்திற்கு மேலான பௌதிக முன்னேற்றத்தை அடைந்துள்ளதோடு, 444 கருத்திட்டங்களின் பௌதிக முன்னேற்றம் 25 சதவீதத்தை விட குறைவானதென அறிக்கையிடப்பட்டுள்ளது. இது தொடர்பிலான தகவல்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.