• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை கடற்படையினால் வெளிநாட்டு வர்த்தக கப்பல்களுக்கு வழங்கப்படுகின்ற கடற்பாதுகாப்பு சேவைகள் தொடர்பில் சட்டரீதியிலான கட்டமைப்பை உருவாக்குதல்
- சருவதேச வர்த்தக கப்பல்களை கடற்கொள்ளையர்களினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு இந்த கப்பல்களில் சுடுபடைக்கலங்களுடன் கடல் பாதுகாவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இத்தகைய அச்சுறுத்தலுடனான ஆபத்துமிக்க வலயங்களில் பயணிக்கும் கப்பல்களுக்கு இத்தகைய பாதுகாவலர்களை ஏற்றிக் கொள்வதற்கும் ஆபத்துமிக்க வலயங்க ளிலிருந்து வரும் கப்பல்களில் உள்ள பாதுகாவலர்களை இறக்குவதற்கும் காலி மற்றும் கொழும்பு துறைமுகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கமைவாக, இவ்வாறு பாதுகாப்பு வழங்கும் தனியார் கடற்பாதுகாப்பு கம்பனிகளுக்குச் சொந்தமான சுடுபடைக்கலங்கள் மற்றும் கருவிகளின் கையாள்கைத் தேவைகளின்மீது இலங்கை கடற்படையின் மேற்பார்வை மற்றும் பாதுகாப்பின் கீழ் கொண்டு செல்தல் மற்றும் களஞ்சியப்படுத்தல் என்பவற்றை ஒழுங்குறுத்தும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.