• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பசளை கொள்வனவு செய்தல் - 2018
- அரசாங்கத்துக்கு சொந்தமான இலங்கை உரக் கம்பனியும் (லக் பொஹர) மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியும் (கொமர்ஷல் பொஹர) சந்தையில் தேவைப்படும் இரசாயன பசளையினை கொள்வனவு செய்வதற்கு உரியதாக சர்வதேச திறந்த போட்டி விலை கோரல் நடவடிக்கை மூலம் கேள்வி கோருவதற்கு நடவடிக்கை எடுத்தன. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 30,000 மெற்றிக் தொன் யூரியா மெற்றிக் தொன் ஒன்று 292.38 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வீதம் Livan Agrichem International Pvt. Ltd, கம்பனிக்கும் 3,000 மெற்றிக் தொன் மியூரியேட் ஒவ் பொட்டாஸ் மெற்றிக் தொன் ஒன்று 317.75 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வீதம் Agiricultural Resources and Investment Pvt. Ltd, கம்பனிக்கும் 15,000 மெற்றிக் தொன் ரிப்பல் சுப்பர் பொஸ்பேற் மெற்றிக் தொன் ஒன்று 324.30 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வீதம் Golden Bali International Pvt. Ltd, கம்பனிக்கும் வழங்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.