• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிங்கிரிய - உடுபத்தாவ நீர் வழங்கல் கருத்திட்டம் - கட்டம் 1
- குருநாகல் மாவட்டத்தின் சில பிரதேசங்களில் அகழப்பட்ட கிணறுகளின் நீரின் தரம் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வொன்றாக குளியாபிட்டிய கிழக்கு, உடுபத்தாவ, பன்னல மற்றும் பிங்கிரிய ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் அமைந்துள்ள 76 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு குழாய் நீர் வழங்கும் பொருட்டு பிங்கிரிய - உடுபத்தாவ நீர் வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மும்மொழியப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு சுத்திகரிக்கப்படாத 36,500 கன மீற்றர் நீரினை இறைக்ககூடிய பம்பி நிலையமொன்றை நிருமாணிப்பதற்கும் நாளொன்றுக்கு 34,500 கன மீற்றர் சுத்திகரிக்கப்பட்ட நீர் உற்பத்தி செய்வதற்கும் இயலுமாகும். இதன் கீழ் பிங்கிரிய முதலீட்டு வலையம் உட்பட பன்னல, மாகந்துர, குளியாபிட்டிய மற்றும் உடுபத்தாவ பிரதேச செயலக பிரிவுகளில் அமைந்துள்ள 33 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த பொதுமக்கள் பயன் அடைவார்கள். இதற்கமைவாக, இந்த கருத்திட்த்தின் முதலாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக Budapest Waterworks Zrt மற்றும் Hungarian Water Cluster நிறுவனத்திடமிருந்து பிரேரிப்புகளை கோரும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.