• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிராந்திய அபிவிருத்தி உதவிக் கருத்திட்டம் (2019 - 2022)
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களுக்குரிய 101 உள்ளூராட்சி நிறுவனங்களின் பொருளாதார நிலைமையை விருத்தி செய்யும் பொருட்டு 106 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட முதலீட்டில் 1,214 உப கருத்திட்டங்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, வறுமையை குறைக்கும் பொருட்டும் பொருளாதாரத்தை மேலும் பலப்படுத்தும் பொருட்டும் இந்த பிரதேசங்கள் சார்பில் பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகள் மேலும் வழங்கப்பட வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உலக வங்கியிட மிருந்து 50 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் உதவியின் கீழும் ஐரோப்பிய யூனியனின் 22.5 மில்லியன் யூரோக்கள் கொண்ட மானியத்தின் கீழும் வட மாகாணத்தில் 34 உள்ளூராட்சி நிறுவனங்களையும், கிழக்கு மாகாணத்தில் 45 உள்ளூராட்சி நிறுவனங்களையும், வட மத்திய மாகாணத்தில் 27 உள்ளூராட்சி நிறுவனங்களையும், ஊவா மாகாணத்தில் 28 உள்ளூராட்சி நிறுவனங்களையும் தழுவி பிராந்திய அபிவிருத்தி உதவிக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.