• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"தியவர நாயோ" நடமாடும் சேவையையும் மற்றும் துரித நீர்ப்பாசன பராமரிப்பு நிகழ்ச்சித் திட்டத்தையும் நடைமுறைப்படுத்துதல்
- நாட்டின் சில பிரதேசங்களில் மூன்று வருடங்களுக்கு மேலாக நிலவிய வரட்சி காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கமத்தொழில் பணிகளுக்கும் 2018 / 2019 பெரும்போகத்தை வெற்றி கொள்வதற்கு தேவையான நீரினை போதுமான அளவு வழங்குவதற்கும் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக சேதமடைந்த கால்வாய்களை புனரமைத்தல், நீண்டகாலமாக நீர்ப்பாசன முறைமைகளில் காணப்படும் பிரச்சினைகளை துரிதமாக தீர்த்தல் என்பவற்றின் மூலம் நீர்ப்பாசன வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் 'தியவர நாயோ" என்னும் பெயரில் நடமாடும் சேவையொன்றை நடைமுறைப் படுத்துவதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் ஆள் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு விவசாயிகளினதும் பொதுமக்களினதும் பங்களிப்புடன் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் அதிகார பிரதேசத்தினுள் நடமாடும் சேவைகளை செயற்படுத்துவதற்கும் நீர்ப்பாசன முறைமைகளில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு துரித பராமரிப்பு நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குமாக நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.