• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் பெயரை 'இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம்' என திருத்துதல்
- கொழும்பு மாவட்டத்தில் தாழ் நிலப்பரதேசங்களில் கட்டடங்களை நிருமாணிப்பதற்கு பொருத்தமான பிரதேசங்களாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டங்களை வகுப்பதனை நோக்காகக் கொண்டு 1968 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் கொழும்பு மாவட்ட (தாழ் நிலப்பிரதேசம்) காணி நிலமீட்பு, அபிவிருத்தி சபை தாபிக்கப்பட்டதோடு, 1982 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க திருத்த சட்டத்தின் மூலம் அதன் பெயர் இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனம் என திருத்தப்பட்டது. தற்போது அதன் பணிகள் கொழும்பு மாவட்டத்திற்கு மாத்திரம் வரையறுக்கப்படாது நாடு முழுவதும் உரியதாகும் விதத்தில் செயற்படுத்தப்படுவதோடு, இதன் பணிகள் காணி நிலமீட்புக்கு மாத்திரம் வரையறுக்கப்படாது நாட்டின் சகல அபிவிருத்தி நோக்கங்களுக்காகவும் விசேட பங்களிப்பினை வழங்குகின்றது. இதற்கமைவாக அதன் பெயரை 'இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம்' என திருத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.