• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மருத்துவ விநியோக பிரிவுக்கு நவீன உயர் கொள்திறனைக் கொண்ட களஞ்சிய தொகுதியொன்றைத் தாபித்தல்
- அரசாங்கத்தின் சுகாதார சேவை நிறுவனங்கள் சகலவற்றிற்கும் தேவையான மருந்துகள், அறுவைசிகிச்சை இரசாயனகூட மற்றும் ஊடு கதிர்பிடிப்பு போன்ற சகல உபகரணங்களையும் வழங்குவது தொடர்பிலான பொறுப்பும் அதேபோன்று தனியார் மருத்துவ சிகிச்சை அடங்கலாக தனியார் மற்றும் அரசாங்க வைத்தியசாலைகள் சகலவற்றிற்கும் அபாயகர ஔடதங்கள் வழங்குவதும் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொழும்பு வௌ்ளவத்தை பிரதேசத்தில் மருத்துவ விநியோக பிரிவிற்குச் சொந்தமாக 30 பெரிய களஞ்சியசாலைகளும் 06 விநியோக பிரிவுகளும் இருந்தபோதிலும் மருத்துவ சேவைகளின் சிறந்த செயற்பாட்டிற்கு இந்த பிரிவுக்கு போதுமான இடவசதிகள் இல்லையென கண்டறியப்பட்டுள்ளது. ஆதலால், வெலிசரையில் அமைந்துள்ள சுவாசநோய் பற்றிய தேசிய வைத்தியசாலை மனையிடத்தில் 04 ஏக்கர் நிலப்பிரதேசத்தில் களஞ்சிய வசதிகளுக்காக கட்டடமொன்றை 2,255 மில்லியன் ரூபா முதலீட்டில் நிருமாணிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.