• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Dialog Axiata PLC - இலங்கை நிறுவனத்தினால் பிரேரிக்கப்பட்ட பேச்சு மற்றும் கேட்டல் நிலையத்தையும் தேசிய புற்றுநோய் தடுப்பு நிலையத்தையும் தாபித்தல்
- Dialog Axiata PLC நிறுவனத்தின் நிதி அனுசரணையுடனும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதியத்தின் கீழும் 146 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவில் பேச்சு மற்றும் கேட்டல் குறைபாடுடன் கூடிய குழந்தைகளினதும் பெரியோர்களினதும் நோய் அறிகுறிகளை அறிந்து கொள்வதற்கும் அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குமான நவீன வசதிகளுடன் கூடிய விசேட நிலையமொன்று சார்பிலும் புற்றுநோய் தடுப்பு மற்றும் புற்றுநோயை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கான தேசிய புற்றுநோய் தடுப்பு நிலையமொன்று சார்பிலும் நாரஹேன்பிட்ட பிரதேசத்தில் நான்கு மாடி கட்டடமொன்றை நிருமாணிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.