• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தம்புள்ளையில் வெப்பநிலை கட்டுப்பாட்டு களஞ்சியசாலை வசதியினை தாபித்தல்
- பழங்கள், மரக்கறி வகைகள், வெங்காயம் போன்றவற்றின் விலைகளை நிலையாக பேணுவதற்கும் நியாயமான விலையின் கீழ் உணவு பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் நுகர்வோருக்கு இயலுமாகும் வகையில் பின் அறுவடை சேதங்களை தவிர்த்து விவசாயிகளின் உற்பத்தியை நீண்ட காலம் கெடாமல் களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் வசதிகளுடனான களஞ்சியசாலை வசதியினை தம்புள்ளையில் தாபிப்பதற்கு திட்டமிடப் பட்டுள்ளது, இந்த களஞ்சியசாலை வசதிகளை இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மேற்கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.