• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வசிக்கும் பெண்களுக்கு வழங்கப்படும் நுண் நிதிக் கடன்களுக்கான கடன் நிவாரணம்
- பெண்களுக்கு வீடு விடாகச் சென்று நுண் நிதிக் கடன்களை வழங்கும் வழிமுறையினை கொண்டு நடாத்தும் நுண்நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன்களுக்கு நூற்றுக்கு 40 தொடக்கம் 220 சதவீதம் வரை வருடாந்த வட்டி அறவிடப்படுகின்றது. அவதானம் மிக்க பொருளாதார செயற்பாடுகள் மற்றும் நுகர்வு நடவடிக்கைகளுக்காகவும் வழங்கப்படும் இந்த கடன் காரணமாக கிராமிய மட்டத்தில் கடன் பெறுபவர்கள் கடன் என்னும் சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளதோடு தற்போது இது கடுமையான பிரச்சினையொன்றாக மாறியுள்ளது. இதற்கு கூடுதலாக முகங்கொடுத்துள்ள வரட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களை இந்த கடன்களிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கு "Enterprise Sri Lanka' நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒருங்கிணைவாக கடன் சலுகை நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.