• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விலங்கு உணவுக்குத் தேவையான மேலதிக சோளத்தை இறக்குமதி செய்தல்
- 2018 ஆம் ஆண்டில் விலங்கு உணவு உற்பத்திக்காக சுமார் 500,000மெற்றிக் தொன் சோளம் தேவைப்படுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆயினும் 2018 ஆம் ஆண்டின் பெரும் போகத்தில் 150,000 மெற்றிக் தொன் சோளமும் சிறுபோகத்தில் 30,000 மெற்றிக் தொன் சோளமும் உற்பத்தி செய்யப்படுமென கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, விலங்கு உணவு உற்பத்திக்காக பயன்படுத்தும் பொருட்டு தேசிய உணவு மேம்பாட்டு சபையினால் 50,000 மெற்றிக் தொன் சோளம் இறக்குமதி செய்வதற்கும் அதன் மீது கிலோ ஒன்றுக்கு பத்து ரூபாவைக் கொண்ட விசேட உற்பத்தி பொருள் வரியொன்றை விதிப்பதற்குமாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினாலும் கடற்றொழில், நீரகவளமூல அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.