• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய பசுபிக் ஔிபரப்பு அபிவிருத்தி நிறுவனத்தின் 17 ஆவது மாநாட்டை இலங்கையில் நடாத்துதல்
- ஆசிய பசுபிக் வலயத்தில் வளர்ச்சி கண்ட மற்றும் நவீன மின்னணு சூழலொன்றை உருவாக்கும் நோக்குடன் ஆசிய பசுபிக் ஔிபரப்பு அபிவிருத்தி நிறுவனம் தாபிக்கப்பட்டுள்ளதோடு, இந்த நிறுவனம் அதன் உறுப்பு நாடுகளின் ஊடக ஆலோசனை நிறுவனமாக செயற்படுகின்றது. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் 1982 ஆம் ஆண்டிலிருந்து இந்த நிறுவனத்தில் முழுமையான உறுப்புரிமையைக் கொண்டுள்ளதோடு, அதன் தொழினுட்ப மற்றும் பயிற்சி வாய்ப்புகளையும் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் 17 ஆவது மாநாட்டை 2018 ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் நடாத்துவதற்கும் அதன் அனுசரணை நிறுவனமாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் செயலாற்றுவதற்குமாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.