• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெறுமதி சேர்க்கப்பட்ட வரியிலிருந்து சுகாதார சேவைகளுக்கான செலவுகளுக்கு விலக்களித்தல்
- 2016 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க பெறுமதி சேர்க்கப்பட்ட வரி சட்டத்தின் மூலம் மருத்துவ ஆலோசனை கட்டணம், வைத்தியசாலை அறைக் கட்டணம், மருத்துவ தொழில்சார்பாளர்களுக்கு செலுத்தும் கட்டணம் போன்ற சுகாதார சேவைகளை வழங்குவதற்குரியதாக பெறுமதி சேர்க்கப்பட்ட வரி விதிக்கப்பட்டதோடு, வைத்தியசாலை அறைக் கட்டணம் தவிர ஏனைய சுகாதார சேவைகள் மீது விதிக்கப்பட்டிருந்த பெறுமதி சேர்க்கப்பட்ட வரியானது 2018 யூலை மாதம் 02 ஆம் திதகியிலிருந்து நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இந்த நோக்கத்திற்காக வௌியிடப்பட்டுள்ள 2018-07-02 ஆம் திகதியிடப்பட்டதும் 2078/06 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர்க்கப்பட்ட வரி சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.