• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்துடன் இணைந்த சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகத்தின் வசதிகளை விருத்தி செய்தல்
- இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணை நிறுவனமான சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவனம், சங்கீதம் மற்றும் நடனம் என்னும் விடயத்துறைகளைவிட மேலதிகமாக நாடகம் மற்றும் அரங்கியல், காட்சி, சிற்பக் கலை போன்ற பாடநெறிகளை கற்பதற்கு இயலுமாகும் வகையில் அதன் கல்வி நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதலால், இந்த நிறுவனத்தினது வசதிகளை தற்போதைய பாடநெறிகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்றவாறு அதிகரிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவனத்தின் கேட்போர் கூடத்தை நவீனமயப்படுத்துதல், செவிப்புல மற்றும் காணொளி (Video) பதிவு செய்தல், பதிப்பித்தல் வசதிகளைக் கொண்ட கட்டட தொகுதியொன்றை நிருமாணிப்பதற்கும் இதற்குத் தேவையான ஏனைய வசதிகளை வழங்கி விருத்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டம் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியாக கிடைக்கப் பெறும் 275 மில்லியன் ரூபாவையும் அரசாங்கத்தின 60.7 மில்லியன் ரூபாவையும் கொண்ட மொத்த முதலீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தும் பொருட்டு உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.