• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையம் மற்றும் இரத்மாலான விமான நிலையம் என்பவற்றுக்காக தொடர்பாடல் முறைமையொன்றை வழங்கி, பொருத்தி, நடைமுறைப்படுத்துதல்
- பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையம் மற்றும் இரத்மாலான விமான நிலையம் என்பவற்றின் செயற்பாடுகளை வினைத்திறனாக மேம்படுத்துவதற்கு தொடர்பாடல் முறைமையொன்றை வழங்கி, பொருத்தி, நடைமுறைப்படுத்து வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 1.7 மில்லியன் யூரோக்கள் உட்பட 6 மில்லியன் ரூபாவும் கொண்ட தொகைக்கு M/s. SITTI S.P.A. நிறுவனத்திற்கு வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.