• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாதிரி கிராமங்களிலுள்ள பயனாளிகளின் வாழ்வாதார அபிவிருத்திக்காக "Enterprise Sri Lanka' மற்றும் 'கம்பெரலிய' தேசிய நிகழ்ச்சித்திட்டங்களைப் பயன்படுத்துதல்
- வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் மாதிரி கிராமங்கள் நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வீட்டு உரிமையை வழங்குதவற்கு மேலதிகமாக அவர்களுடைய எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு பல்வேறுபட்ட நிகழ்ச்சித்திட்டங்களும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. மாதிரி கிராமங்களிலுள்ள பயனாளிகளின் வாழ்வாதார அபிவிருத்தியின் பொருட்டு பயன்படுத்திக் கொள்ளக்கூடிய விதத்தில் கிராமிய வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பதற்கும் இந்த கிராமங்களிலுள்ள பயனாளிகள் அனைவரினதும் வாழ்வாதார வழியினை உறுதி செய்யும் விததத்தில் "Enterprise Sri Lanka மற்றும் 'கம்பெரலிய' தேசிய நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்து'வதற்குமாக வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.