• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய இறப்பர் தோட்ட உரிமையாளர்களை பலப்படுத்துதல்
- கடந்த காலப் பகுதியில் சருவதேச சந்தையில் இயற்கை இறப்பரின் விலை குறைவடைந்ததன் காரணமாக உள்நாட்டு இயற்கை இறப்பர் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக சுமார் 130,000 சிறிய இறப்பர் தோட்ட உரிமையாளர்களை பாதுகாப்பதற்கும் அவர்களை இறப்பர் செய்கை துறையில் தொடர்ந்தும் தேக்கி வைத்துக் கொள்வதற்குமாக விசேட நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளன. இதற்கமைவாக, உற்பத்தி வினைத்திறனை மேம்படுத்துவற்கு உதவும் இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்டு விருத்தி செய்யப்பட்ட உபகரணங்கள் மற்றும் கருவிகளைக் கொண்ட 5,000/- ரூபா பெறுமதியான உபகரணங்களை "துருசவிய" சங்க உறுப்பினர்கள் 10,000 பேர்களுக்கு 2018-2019 ஆம் ஆண்டினுள் வழங்கும், பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.