• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தூய இலங்கை தேயிலை ஏற்றுமதிக்கு வியாபார பெயர் ஊக்குவிப்பு திட்டம் - 2018/2019
- 2015 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக சிங்க இலட்சினையுடன் தூய இலங்கை தேயிலை என்னும் வியாபார பெயரை தொடர்ந்தும் உலகம் முழுவதும் பிரபல்யப்படுத்துவற்கு வியாபாரப் பெயர் ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 19 கம்பனிகளுடன் உடன்படிக்கைகள் செய்துகொள்ளப்பட்டிருந்ததோடு, இதன் கீழ் சுமார் 177 மில்லியன் ரூபா இந்த நோக்கத்திற்காக செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த வியாபாரப் பெயர் ஊக்குவிப்புத் திட்டத்தை 2018/2019 ஆண்டு சார்பிலும் நீடிப்பதற்கு இலங்கை தேயிலை சபை திட்டமிட்டுள்ளது. இதற்கமைவாக, இலங்கை தேயிலை சபையினால் திட்டமிடப்பட்ட தேயிலை ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒருங்கிணைவாக தனிப்பட்ட வியாபாரப் பெயரை ஊக்குவிக்கும் பொருட்டு உரிய தகைமைகளை கொண்டுள்ள முழுமையான உள்நாட்டு உரிமையுடனான தேயிலை ஏற்றுமதி கம்பனிகள் / ஏற்றுமதியாளர்கள் ஏற்கும் ஊக்குவிப்புச் செலவின் 50 சதவீதத்தை அவர்களுக்கு மீளளிப்பதற்காக இலங்கை தேயிலை சபையின் நிதியங்களிலிருந்து' 500 மில்லியன் ரூபாவை குறித்தொதுக்கும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.